&
Advertise Here with Today.com
 

Nov 21 2008

ஆயுள் காப்பீடு ஒரு கண்ணோட்டம்

Published by j.mohammedshariff

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் ஆயுள் காப்பீடு என்பது தற்சமயம் தேவையில்லாதது என்கிற மனோபாவம் கொண்டிருக்கிறார்கள் . மக்கள் தன் வாழ்நாட்களிலேயேஅதன் பயனை அனுபவிக்க நினைக்கிறார்கள். காப்பீடு என்பது கண்ணுக்கு புலப்படாத ,நம் எதிர்கால வாழ்க்கை,குழந்தைகள் நலன் மற்றும் கல்வி, அவர்களின் திருமண உதவி ,நம் வாழ்க்கைக்குப் பின்னரும் நம் குடும்பத்தினர் பாதுகாப்பாக வாழ இப்படி பல வகையில் உதவும் ஒரு ஒப்பற்ற சாதனம் என்பதை அறிய வேண்டும் . இந்தியாவில் கிட்டத்தட்ட 13நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு, பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது . நாம் நமக்கு எந்த திட்டம் ஒத்து வருமோ அதை தேர்ந்தெடுத்து கண்டிப்பாக நம் எதிர்கால சந்ததிக்கு ஓர் பாதுகாப்பான சூழலை உருவாக்க முன் வர வேண்டும் .
காப்பீட்டு நிறுவனங்களும் வியாபார வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் மனதில் உள்ள தவறான எண்ணத்தை போக்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் . இன்னும் பல நிறுவனகளின் திட்டங்களோடு அவர்களின் செயல்பாடுகள் குறித்து நிறைய தகவல்களோடு உங்களை நாளை மீண்டும் சந்திக்கிறேன். ….
காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய காப்பீட்டு திட்டங்களை அவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு என்னோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன் .

Advertise Here with Today.com

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.
Not A Member? Register for Free!

Advertise Here